உலகம் முழுக்க பல்வேறு நாட்டவராலும் கொண்டாடப்படும் சர்வதேச பண்டிகைகளில் ஒன்று ரமலான் நோன்பு பெருநாளாகும். ஈதுல் ஃபித்ர் என்ற பெயரில் கொண்டாடப்படும் இப் பண்டிகை உலகை இணைக்கும் திருநாட்களில் முதன்மையானது. இவ்வாண்டு கொரணா தொற்று காரணமாக பெரும் நெருக்கடிகளோடு இப்பெருநாளை உலகம் எதிர்கொள்கிறது. இறையுணர்வு பூத்துக் குலுங்கும் ரமலான் மாதம், இம்முறை இறையில்லங்கள் திறக்கப்படாததால்,நட்சத்திரங்களை பறிகொடுத்த நீல வானத்தைப் போலவே கழிந்தது. வீட்டுக்கு வந்த விருந்தினரை வீதியிலேயே வைத்து வழியனுப்பியது போன்ற உணர்வு உறுத்துவதை மறைக்க முடியவில்லை. மானுட நன்மைக்காக பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள், வீதிகளில் பொது சந்திப்புகள், சிறப்பு சொற்பொழிவுகள், நல்லிணக்கத்தை நிறுவும் இஃப்தார் நிகழ்ச்சிகள் யாவும் தவிர்க்கப்பட்டு அவரவர் இல்லங்களிலேயே ரமலான் நோன்புகள் கடைப்பிடிக்கப்பட்டு, பெருநாளும் அவ்வாறே திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கு வாரி கொடுக்க பணமும், மனமும் இருந்தும் வாங்கும் வறியோர் யாரையும் வீதிகளில் காண முடியவில்லையே என்ற ஏக்கமும்; கொடுத்து கொடுத்து கை சிவந்து, அதன் மூலம் இறையன்பை கூடுதலாக பெற முடியாமல் போய்விட்டதே என்ற வாட்டமும் பரவலாக இருக்கிறது. எனினும் அமைதியான சூழலில் இறைவனை வழிபடவும், நோன் போடு தவமிருந்து பிரார்த்திக்கவும் கூடுதல் நேரம்
You are here
Home > Posts tagged "ரமலான் நோன்பு பெருநாளை"