டிச.05,
சிதம்பரம் இரயில் நிலையம் இந்திரா நகரில் மழைவெள்ள நீரால் சூழப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்களுக்கு மஜக பேரிடர் மீட்பு குழுவினர் உணவு விநியோகம் செய்தனர்.
முன்னதாக உணவுகளை தயார் செய்து மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்குள் பைபர் மிதவையில் உணவுகளை பொட்டலங்களை எடுத்து சென்று நீரில் இறங்கி உணவுகளை அம்மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கினர்.
தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் மஜக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
எதிர்பாராத வகையில் பெய்த மழையினால் கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மாவட்டம் முழுவதும் மஜகவினர் உசார் படுத்தப்பட்டு களத்தில் இருந்து வருகின்றனர்.
தகவல்;
#மஜக_பேரிடர்_மீட்பு_குழு
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.