தஞ்சை.பிப்.02.., தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் 1500-க்கும் அதிகமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றிய இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... கடந்த ஒன்றரை மாதங்களாக எல்லோரும் போராடி வருகிறோம். ஒரு நாளைக்கு 2, 3. நிகழ்ச்சிகள் என ஒயாது சுற்றி வருகிறோம். தோழர்கள் வேல்முருகன், திருமுருகன் காந்தி, வே.மதிமாறன், சுந்தரவள்ளி, பேரா.மார்க்ஸ், வேலுச்சாமி போன்ற எண்ணற்ற தலைவர்கள் இரவு பகலாக சுற்றி வருகிறார்கள். நிம்மதியாக நம்மால் உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கட்சி பணிகளில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. ஒரே போராட்டம், பொதுக்கூட்டம் என நாட்கள் நகர்கிறது. ஆனாலும் நாம் சோர்வடையவில்லை. இதற்கு உதாரணம் ஜனவரி-30 அன்று தமிழகத்தில் நடைப்பெற்ற மனிதசங்கிலி போராட்டம் ஆகும். சென்னை முதல் குமரி வரை 950-கி.மீ நீளத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் மனித சுவர் போராட்டமாக மக்கள் எழுச்சியோடு மாறியது. பொதுமக்கள் சாதி, மதம் மறந்து தன்னெழுச்சியாக போராட வருகிறார்கள். ஆனால்
You are here
Home > Posts tagged "முதமிமுன்அன்சாரிMLAபேச்சு.!"