சிவகங்கை.நவ.19.., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் அவர்களை இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்தில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் மற்றும் பரமக்குடி நகர நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பரமக்குடி நகர் முழுவதும் வார்டு கிளைகள் அமைப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது. நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்தும். விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ், பரமக்குடி நகரச் செயலாளர் எமனை சாகுல், நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி கான், நகர மாணவர் இந்தியா செயலாளர் கனிபா, எமனேஸ்வரம் இளைஞரணிச் செயலாளர் இஷாம் மற்றும் பசீர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #இராமநாதபுரம் 18-11-2019
You are here
Home > Posts tagged "மஜக மாநிலபொருளாளருடன்"