ஏப்ரல்.02., கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் மக்களின் அன்றாட தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து விநியோகித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஐந்து நாட்களாக மஜக-வினர் மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் தலைமையில் தேநீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் தொடர்ந்து விநியோகித்து வருகின்றனர். பிள்ளை பேருக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தினமும் குறிப்பிட்ட மாலை நேரத்தில் மஜக-வினரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து இலவசமாக வாங்கி செல்கின்றனர். தேநீர் வாங்கி செல்லும் பலரும் சொல்வதாவது.. குழந்தைகளை பெற்றடுத்த தாய் மார்களுக்கு அடிக்கடி பசி எடுப்பதால் அருகில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டுள்ளதால் செய்வதறியாது இருந்த எங்களுக்கு தேவை கருதி தினமும் தேநீர் மற்றும் பிஸ்கேட் பாக்கெட்டுகளை கொடுத்து உதவும் மஜக-வினருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். ஊரடங்கு அமலில் இருக்கும் அனைத்து நாட்களும் தேவை கருதி இப்பணி தொடரும் என்று மாவட்டச்செயலாளர் கண்மணி
You are here
Home > Posts tagged "மஜகவிருதுநகர்மாவட்டம்சார்பாகதொடர்மக்கள்பணிகள்"