#கறுப்புச்சட்டங்களைதமிழகத்தில்திணிக்கநினைத்தால்தமிழர்கள்அதைகிழித்துஎறிவார்கள்! மஜகபொதுச்செயலாளர் # டிச.21, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்றது. கூட்டத்தில் "நாமே இந்தியர் என்போம்' என பொருள்படும் ராணுவத்தில் இசைக்கப்படும் ,"சாரே ஜஹாங் சே அச்சா ° என்ற பாடல் ஒலிபரப்பானதும், கூட்டம் எழுந்து நின்று இந்திய தேசிய கொடியை அசைத்து ஆராவரித்தது. "மதத்தால் மக்களை பிரிக்காதே.. நாட்டின் ஒற்றுமையை குலைக்கதே.." என முழக்கங்கள் அதிர்ந்தன. பழைய பெங்களுர் சாலை நெடுகிலும் கூட்டம் வழிந்து நின்றது. ஆயினும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கூட்டம் நாகரீகமாக கூடியிருந்தது. பல இந்து சமுதாய சகோதரர்கள் தொண்டர் அணியாக நின்று மக்களை ஒழுங்குப் படுத்தினர். கட்டிடங்களில் மேல் எல்லாம் கூட்டம் ஏறி நின்று மோடி - அமித் ஷாவுக்கு எதிராக ஆர்ப்பரித்தது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது:- "மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்துக்களையும், முஸ்லிம்களையும் நீங்கள் பிரிக்க நினைத்தீர்கள். இன்று உங்களுக்கு எதிராக நாங்கள் அண்ணன், தம்பிகளாக இணைந்து போராடுகிறோம். நீங்கள் கறுப்பு சட்டத்தை திணிக்க நினைத்ததால், இன்று நாங்கள் இந்தியர்களாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறோம். கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம்
You are here
Home > Posts tagged "மஜகபொதுச்செயலாளர்"