தூத்துக்குடி_ஏப்-9., மனிதநேய ஜனநாயக கட்சி காயல்பட்டினம் நகரம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீர் தொடர்ச்சியாக இன்று 4-வது நாளாக விநியோகம் செய்யப்பட்டது. காயல்பட்டிணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் வழிகாட்டுதலில் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக இன்று மாலை பெரிய நெசவு தெரு மற்றும் சின்ன நெசவு தெரு பகுதிகளில் வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீர் சமூக இடைவெளியை பேணி விதிமுறைகளை கடைபிடித்து விநியோகம் செய்யப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் A.R. சாகுல் ஹமீது தலைமையில் நெசவு ஜமாத் தலைவர் KKS காதர்மீரான் அவர்கள் கபசுரக் குடிநீர் விநியோகித்து துவக்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், காயல்பட்டிணம் நகர நிர்வாகிகள் ஜிபுரி, மீரான், இப்னுமாஜா, இர்ஷாத், சித்தீக், ஷேக் முகமது மற்றும் மஜக-வினர் கலந்து கொன்டு கபசுரக் குடிநீர் விநியோகம் செய்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_மாவட்டம் 09-04-2020
Tag: மஜககாயல்பட்டினம்நகரம்சார்பில்கபசுரக்குடிநீர்விநியோகம்
மஜக காயல்பட்டினம் நகரம் சார்பில் கபசுரக்குடி நீர் விநியோகம்!
தூத்துக்குடி ஏப்.06, மனிதநேய ஜனநாயக கட்சி காயல்பட்டினம் நகரம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் 'கபசுர குடிநீர்' விநியோகத்தைக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் A.R சாகுல் ஹமீது துவக்கி வைத்தார். முதற்கட்டமாக நகரின் சிலபகுதிகளில் சமூக விலகலை கடைபிடித்து விதிமுறைகளை பேணி வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீரை மஜகவினர் சிறுக்குழுக்களாக பிரிந்து விநியோகம் செய்தனர். தொடர்ச்சியாக நகர் முழுவதும் விநியோகம் செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், நகர நிர்வாகிகள் ஜிப்ரி, மீரான், இப்னுமாஜா, மொகுதும், ரியாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_மாவட்டம். 06.04.2020