ஜனவரி.3.., இன்று தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஜமாத்தினர் இதற்கு ஆதரவு அளித்து திரளாக பங்கேற்றனர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசியதாவது.. பல கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் இருக்கும்போது, நாங்கள் வாழ்வுரிமைக்கான போராட்ட களத்தை நடத்தி வருகிறோம். அதில் கவனம் செலுத்தியதை விட இதில் தான் தீவிரமாக இயங்கி வருகிறோம். இது நாட்டை காக்கும் அறப்போராட்டம். இது எங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. நாளுக்கு நாள் போராட்ட களம் வீரியமடைகிறது. மக்கள் தன்னெழுச்சியாக திரள்கிறார்கள். மத நல்லிணக்கத்துடன் கூடிய இன்னொரு சுதந்திர போராட்டமாக இது மாறியுள்ளது. இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெறும் வரை ஓய மாட்டோம். இவை தொடக்கம் தான். இன்னும் முழுமையான போராட்டம் தொடங்கவில்லை. வட இந்திய ஊடகங்களிடம் போராட்ட காட்சிகளை, செய்திகளை முக்கியப்படுத்த வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளதாம். இருட்டடிப்புகளை தாண்டி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூடி மறைக்க முடியாது. இந்த போராட்டங்களை சில மூளை வீங்கிகள் கொச்சைப்படுத்தி, தங் களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். போராட்டம் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள்
You are here
Home > Posts tagged "நெல்லைகண்ணன் கைது"