கடலூர்.பிப்.03.., மதரீதியாக, இன ரீதியாக, இந்தியாவை பிரிக்கும் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக கடலூர் மாவட்டம் லால்பேட்டையை அடுத்து உள்ள எள்ளெரியில் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் ஊராட்சி மன்ற துணை தலைவர் A.M.K.ஹம்ஜா தலைமையில் நேற்று (02-02-2020) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் O.R.ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கியாசுதீன், முஹம்மது ரியாஸ், மாணவர் இந்தியா முஸரப், லால்பேட்டை நகரச் செயலாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்பம்_அணி #MJK_IT_WING #கடலூர்_மாவட்டம் 02-02-2020
Tag: தைமிய்யா பங்கேற்பு.!
மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாட்டில் குடியுரிமை பறிப்பு சட்டத்திற்கெதிரான ஆலோசனைக் கூட்டம்.! தைமிய்யா பங்கேற்பு.!
சென்னை.ஜனவரி.14., மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் CAA, NRC, NPR போன்ற சட்டத்திற்கெதிரான போராட்த்தை மேலும் வீரியமடைய செய்வது குறித்தான ஆலோசனை நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா கலந்து கொண்டு பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக-வின் சட்டமன்ற நிகழ்வையும், முதல்வர் சந்திப்பு, மஜக நடத்திய போராட்டக்களத்தை பற்றியும் விரிவாவக விளக்கினார். மேலும் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில், மஜக மாநில துணைச் செயலாளர் சமீம் அஹமது, மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை. 14-01-2020