சென்னை.ஏப்ரல்.17., இந்தியா முழுவதும் கடந்த 24 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக திருவாரூர் மாவட்டம் சார்பாக மாவட்டப் பொருளாளர் சேக் அப்துல்லாஹ் தலைமையில் புலிவலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் அஷமது ஜலால், துணைச் செயலாளர் நிஜாமுதீன், நகரச் செயலாளர் சித்திக், நகரப் பொருளாளர் பாலா, கிளை செயலாளர் சேத்தப்பா (எ) முகம்மது மைதீன், கிளை இலைஞர் அணிச் செயலாளர் ரியாஜி மற்றும் கமாலுதீன், அன்சாரி உள்ளிட்ட மஜகவினர் பல குழுக்களாக பிரிந்து நிவாரண பொருட்களை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 17-04-2020
Tag: திருவாரூர்
முத்துப்பேட்டையில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்தவெள்ளம், கண்டும் காணாத பேரூராட்சி , களத்தில்இறங்கியமஜக!
டிச.05, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ஊரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று வெள்ளக்காடானது. கடந்த மூன்று தினங்களாக சுட்டெரிக்கும் வெய்யில் அடித்தபோதும் திமிலத் தெரு பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீர் வடியாமல் குப்பைகளோடு சேர்ந்து துர் நாற்றம் வீசி நோயை பரப்பும் கேந்திரமாக மாறும் நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் தினமும் தங்கள் அன்றாட தேவைகளுக்காக தேங்கிய நீரில் இறங்கி வெளியில் செல்ல வேண்டி இருந்தது. குறிப்பாக பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளும் இந்த நீரில் இறங்க வேண்டியுள்ளதால் அவர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டது. முத்துப்பேட்டை பகுதியில் டெங்குவின் தாக்கம் அதிகமுள்ளதால் இப்பொழுது மழை நீர் தேங்கியதால் நோய் பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர் என பேரூராட்சியின் கவனத்திற்கு மஜக வினால் சுட்டிக்காட்டப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மஜக சார்பில் ஒன்றிய செயலாளர் பால்காரமைதீன், நகர பொருளாளர் பசீர்அலி ஆகியோர் ஏற்பாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தனியார் பம்பு செட் மோட்டாரை வாடகைக்கு எடுத்து வந்து திமிலத் தெருவின் பல்வேறு பகுதிகளில் தேங்கி