நாகை.நவ.21.., தென்னிந்தியாவின் முதல் ரயில் தடம் பதிக்கப்பட்ட ஊர் நாகப்பட்டினமாகும். ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய ரயில்வே கம்பனி (SIRC) நாகப்பட்டினத்தில் பதிவு செய்யப்பட்டு 1861 முதல் 1875 வரை இயங்கி வந்தது. இந்தியாவின் முதல் அகலப் பாதையும் இங்கு தான் அமைக்கப்பட்டிருந்தது.பிற இடங்களில் மீட்டர் கேஜ் பயன்பாடு இருந்ததால், பிறகு இதுவும் மீட்டர் கேஜாக மாற்றப்பட்டது. தற்போது சென்னை, எர்ணாகுளம், கோவா, பெங்களுர், மும்பை ஆகிய ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. திருச்சிக்கு 3 பாசஞ்சர் ரயில்களும், தஞ்சைக்கு ஒரு பாசஞ்சர் ரயிலும் இயங்கி வருகிறது. காரைக்காலும், வேளாங்கண்ணியும் முக்கிய இணைப்பு மையங்களாக உள்ளது. இந்நிலையில் நாகையில் ரெயில்களின் பயன்பாடுகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என நாகை - நாகூர் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். காரைக்கால் முதல் திருச்சிக்கு காலை 6 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும், மாலை 7 மணிக்கு அங்கிருந்து திரும்ப ஒரு ரயிலும், நாகையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு ரயிலும் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்தனர். அது போல் காரைக்கால் - பேரளம் ரயில் தட பணிகளை
You are here
Home > Posts tagged "காரைக்கால் – பேரளம்"