#மஜகசார்பில் 50 ஆயிரம் தண்ணீர் குடுவைகள் விநியோகம்..! சென்னை.டிசம்பர்.23.., இன்று திமுக ஏற்பாட்டில், கூட்டணி கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், பொருளாளர் ஹாரூன் ரசீது உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான மஜக-வினரும் பங்கேற்றனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களில் நின்றவாறு, 50 ஆயிரம் மினரல் வாட்டர் போத்தல்களை விறுவிறுப்பாக விநியோகித்தவாறு இருந்தனர். மஜக-வினரின் தண்ணீர் விநியோக வாகனங்களை சுற்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று தண்ணீரை பெற்று தாகம் தீர்த்து கொண்டனர். மஜக-வினரின் இந்த சேவையை தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வெகுவாக பாராட்டினர். அது போல் மஜக-வின் ஆம்புலன்ஸ்களும் முதல் உதவிக்காக பேரணியின் வழிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மஜக இளைஞரணியின் சார்பில் அவசர உதவி மீட்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. திமுக கூட்டணியின் இப்பேரணிக்கு ஆதரவளித்த, ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றாக அணிவகுத்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பார்வர்டு
You are here
Home > Posts tagged "கறுப்புசட்டங்களுக்குதிமுகதலைமையில்சென்னையில்பிரம்மாண்டபேரணி..!"