(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் சமூக இணையதள கட்டுரை) இன்று சமூக இணையதளங்கள் மக்களின் நேரடி வாழ்வோடு இணைந்திருக்கின்றன. இது தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பொற்காலமாகும். இது அறிவியல், வரலாறு, சமூகவியல், உயர்சிந்தனை இவற்றுக்கு வழிகாட்டுவதற்கு பெரிதும் பயன்படவேண்டும். இதற்கு நேர் மாறாக சண்டைகள், குழு மோதல்கள், அவதூறுகள், சமூக பகைமை, தனிநபர் கண்ணியத்தை அழித்தல் மற்றும் அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றுக்கு துணைப்போவது வருத்தமளிக்கிறது. 'வரங்களே சாபங்கள் ஆனால் தவங்கள் எதற்காக..?' என்ற கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் கவிதைகள்தான் நினைவுக்கு வருகிறது. சமூக இணையதளங்களில் பணியாற்றும் அனைவரும் சமூக பொறுப்பை, தனிநபர் கட்டுப்பாட்டை உணர்ந்து கருத்துக்களை பதிவிட வேண்டும். அவர்கள் தங்களை நீதிபதிகளாகவும், ஆசிரியர்களாகவும், நாட்டாண்மைகளாகவும் கருதும் போது தங்களின் பொறுப்புணர்வை மீறி விடும் அபாயம் உள்ளது. 'ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். சகட்டுமேனிக்கு வார்த்தைகளை கொட்டும் இடங்களாக சமூக இணைய தளங்கள் மாறி விடக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் " பேசினால் நல்லதை பேசுங்கள் ; இல்லாவிடில் மெளனமாக இருந்து
You are here
Home > Posts tagged "கட்டுப்பாடற்ற சுதந்திரம்"