ஜன.04, தஞ்சாவூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேரா.காதர் மைதீன், தோழர் பெ.மணியரசன், பழனிமாணிக்கம் MP, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா, தோழர்.ஜீவகுமார், துரை.சந்திரசேகரன் MLA, நீலமேகம் MLA, தோழர். P செந்தில் குமார், தோழர்.சொக்கா.ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பங்கேற்று பேசியதாவது:- 'CAA சட்டத்தின் வழியாக யாருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என நாம் கூறவில்லை. அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக யார் வந்தாலும் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்கிறோம். இதில் ஈழத் தமிழர்களை புறக்கணித்தது என்ன நியாயம்? என்கிறோம். அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இங்கே இருக்கிறார்கள். அவர்களை நிராகரிக்கலாமா? பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களையும், சீக்கியர்களையும் ஏற்கும் நீங்கள் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கலாமா? அவர்களையும் இதில் இணைத்து குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். நேபாளத்திலும், பூடானிலும் மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் கிறிஸ்தவர்களையும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும், அதே போல இந்திய - பங்களாதேஷ் எல்லையில் வசிக்கும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் அகதிகளாக வந்தால் அதை ஏற்று குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். இதை ஏற்க மாட்டோம் என்பதால்
You are here
Home > Posts tagged "ஈழத்தமிழர்கள்"