தென்காசி., நவ.17 தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள அச்சன்புதூர் புனித ஜான்ஸ் நர்சரி, பிரைமரி பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்கள். இம்முகாமிற்கு தென்காசி மாவட்ட பொறுப்பாளர் பீர் மைதீன் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் கமால்தீன், துணைச் செயலாளர்கள் முகம்மது ரியாஸ், ஷேக் முகம்மது, செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் அன்வர் சாதிக், துணைச் செயலாளர் முகம்மது ஷாபீக், இளைஞரணிச் செயலாளர் முகம்மது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலாளர் முகம்மது நாசர் அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் நாகர்கோவில் பெஜான்சிங் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவச கண்சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். அச்சன்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதில் 40 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 30 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் ஏ.ஆர்.சாகுல் ஹமீது, சேகரத் தலைவர்
You are here
Home > Posts tagged "இலவச கண் சிகிச்சை"