நாகையில் ரேஷன் கடையை ஆய்வு செய்தார் MLA !! வழங்கப்படாத வேட்டி – சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார் !

#நாகையில்_ரேஷன்_கடையை_ஆய்வு_செய்தார்_MLA..!

#வழங்கப்படாத_வேட்டி_சேலைகளை_பயனாளிகளுக்கு_வழங்கினார்..!!

நாகை.ஜன.24., இன்று நாகை நகரத்தில் 23 வார்டு, புதுத்தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு M. தமிமுன் அன்சாரி MLA திடீர் ஆய்வு மேற்கொண்டார் .

அங்கு வந்திருந்த மக்களிடம் ரேஷன் கடை விநியோக முறைகள் குறித்து கருத்து கேட்டார். கூடுதலாக மண்ணெனய் வழங்க வேண்டும் என மக்கள் கோரினர்.

உடனே வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொன்டு அடுத்த மாதம் முதல் கூடுதல் மண்ணென்ணைய்  வழங்க உத்தரவிட்டார்.

பொங்கலை முன்னிட்டு வழங்கப்படாமல் மீதம் இருந்த வேட்டி சேலைகளை அப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை வாரியாக வழங்கினார்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
24.01.18

Top