கடந்த ஞாயிறு (ஜூலை 23) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் தென்னிந்திய முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பில் ஈத்மிலன் நிகழ்ச்சியுடன் , சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது .
கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் , பிஷப் P. ஜெமிஜீயஸ் , திரு. சிவ குற்றாலம் , மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் , ஆக்ஸ்போர்டு அலிகான் , திருவை . அப்துல் ரஹ்மான் என பல்வேறு சமூக பிரமுகர்களும் பங்கேற்றனர் .
இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினர் அனைவரும் ஆன்மீக கொள்கைகளை இறக்குமதி செய்து கொண்டதை தவிர , அவர்கள் யாரும் வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல . இந்த மண்ணின் பூர்வக்குடிகள் . மொழியாலும் , பண்பாட்டாலும் பிற மக்களுடன் இணைந்து வாழ்பவர்கள் . சில தீயசக்திகள் ஏற்படுத்தும் பிரிவினைகளை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் . பயங்கரவாதம் , வன்முறை மதவெறி ஆகியவற்றுக்கு மத , இன அடையாளங்களை போர்த்தக் கூடாது என அவர் கூறினார் .
– மஜக ஊடகப்பிரிவு