உடைந்த படகுக்கு நஷ்டஈடு தேவை ! காரைக்கால் மார்க் துறைமுகத்துடன் நாகை MLA பேச்சுவார்த்தை !

image

image

இன்று காலை நாகை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது,காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு வந்த வெளிநாட்டு கப்பல் ஒன்று மீனவர்களின் படகின் மீது மோதியதில்,படகு முற்றிலும் சேதமடைந்தது.மேலும் 7 மீனவர்கள் மருத்துவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து நாகை தொகுதி மீனவ பஞ்சாயத்து தலைவர்களும்,நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MLA உள்ளிட்டவர்களும் மார்க் துறைமுக தலைமையகத்திற்கு சென்றனர்.

அங்கு துறைமுக பொறுப்பு அதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.மார்க் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன.

இப்போது நடந்த விபத்துக்கு,மார்க் துறைமுக நிர்வாகம் பொருப்பேற்று,நஷ்டஈடு பெற்று கொடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட கப்பல் நிர்வாகம் மற்றும் ஏஜன்சியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும்,நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும்,துறைமுக நிர்வாகி ரெட்டி கூறினார்.

பிறகு பாதிக்கப்பட்ட மீனவர்கள்,நாகை அரசு மருத்துவமனையில் சேரக்கபட்டிருந்தனர்.அவர்களை MLA அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களிடம் கேட்டுகொண்டார்.

-தகவல் : நாகை சட்டமன்ற தொகுதி அலுவலகம்