மலபுரத்தில் மஜக பரப்புரை இது கோட்சே தேசமல்ல காந்தி தேசம் தமிழ்நாடு கேரள மக்களின் மனநிலையை இந்தியாவின் மன நிலையாக மாற்ற வேண்டும் மலப்புரத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு……

ஏப்ரல்.22.,

கேரளாவில் காங்கிரஸ் – IUML அங்கம் வகிக்கும் UDF கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொன்னானி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு தொகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இங்கு மலப்புரம் தொகுதியில் நடைபெற்ற Family Meet up என்ற குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகளின் தலைவர்களுடன் பங்கேற்றார்.

இங்கு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஈ.டி.முஹம்மத் பஷீர் அவர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து பேசியதாவது…

இந்தியாவில் 44 கோடி பேர் இரவு உணவு உண்ணாமல் உறங்கும் நிலை உள்ளது.

கடந்த 10 ஆண்டு கால மோடியின் பாஜக ஆட்சியில் உலக அளவில் பட்டினி தர வரிசையில் இந்தியா சில ஆப்பிரிக்க நாடுகளை விட பின் தங்கி 111-வது வரிசையில் உள்ளது.

நாட்டில் 5 கோடி பேர்தான் வறுமையில் உள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

அப்படியெனில் 20 கோடி மக்களுக்கு ரேஷனில் இலவச அரிசி வழங்குவது ஏன்?

ஏழைகள் நிறைந்த நாட்டின் பிரதமர், தன்னை ஏழைத்தாயின் மகன் என்பவர் 10 லட்சம் ரூபாயில் கோட் சூட் அணிகிறார்.

1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயில் கூலிங் க்ளாஸ் கண்ணாடி அணிகிறார்.

விவசாயிகள், தொழிலாளர்கள் என சாமானியர்களின் சிரமங்களை போக்கிட அக்கறை காட்டவில்லை.

இவர் அம்பானிகளுக்காகவும், அதானிகளுக்காகவும் ஆட்சி நடத்துகிறார்.

இவர் முதல்வராக இருந்த போது குஜராத்தில் கலவரம் நடந்து ரத்த ஆறு ஓடியது.

பிரதமராக இருக்கும் போது மணிப்பூரில் கலவரத்தால் ரத்தாறு ஒடியது.

இது கோட்சே தேசமாக கட்டமைக்க முயல்கிறார்கள். இது காந்தி தேசம் என்பதை நிருபிக்க வேண்டும்.

இந்தியாவை குஜராத் மனநிலைக்கு மாற்ற துடிக்கிறார்கள்.

நாம் இந்தியாவை தமிழ்நாடு – கேரள மக்களின் மனநிலைக்கு மாற்ற வேண்டும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நமது நோக்கம் இதை நோக்கியே உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் கேரள மாநில பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான ஜாவித் ஜாபர் அவர்கள் தலைவரது உரையை மலையாளத்தில் மொழிபெயர்க்க கூட்டம் அவ்வப்போது கைத்தட்டி வரவேற்றது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கேரளா – #தென்னிந்தியா
22.04.2024.