ஏப்ரல்.03.,
ராமநாதபுரத்தில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் போட்டியிடும் IUML வேட்பாளர் நவாஸ் கனி MP அவர்களை ஆதரித்து இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரையில் ஈடுபட்டார்.
அவருடன் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களும், காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் MLA அவர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர்.
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சூர், பொட்டி தட்டி, மஞ்சக்கொல்லை ஆகிய இடங்களில் திரளான பொதுமக்களுக்கு மத்தியில் தலைவர் பேசினார்.
அதில் பேசியதாவது…
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று முந்தைய தேர்தல் வாக்குறுதியாக மோடி கூறினார்.
10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும்.
அதை செய்யவில்லை.
வெளிநாட்டில் உள்ள பணக்கார இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் போடப்படும் என்றார்.
எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை.
ஏழைகளை பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள்.
இந்த தேர்தல் பரப்புரையில் நமது முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை.
தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உள்ளது.
2 வது, 3 வது, 4 வது இடங்களுக்கு வர போட்டி நடக்கிறது.
ஆனால் இப்போதே 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விட்டது என்பதே கள நிலவரமாகும்.
வாக்கு வித்யாசங்களை கூட்டி காட்டுவதற்காகவே இப்போது உழைக்கிறோம்.
இந்த தேர்தல் மூலம் நாட்டை பாதுகாக்க வேண்டும்.
ஜனநாயகத்தை பாதுகாக்கவே களத்தில் நாம் இப்போது போராடுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்றைய பரப்புரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் வாகன ஊர்வலத்துடன் பங்கேற்றனர்.
இதை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் அவர்கள் பாராட்டினார்.
இன்றைய நிகழ்வில் மஜக இளைஞர் அணி செயலாளரும், தொகுதி பொறுப்பாளருமான புதுமடம் பைசல் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலாளர் கீழை இப்ராகிம் தலைமையில் இன்றைய பரப்புரை எழுச்சியோடு நடைபெற்றது.
இதில் மாவட்ட / ஒன்றிய / நகர / கிளை நிர்வாகிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தினமும் மஜக-வினரின் பங்கேற்புகள் சிறப்பாக இருப்பதாக வேட்பாளர் நவாஸ் கனி MP அவர்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரியிடம் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
தகவல் :
#தேர்தல்_பணிக்குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ராமநாதபுரம்_மாவட்டம்
03.04.2024.