மார்ச்.05.,
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 24 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
7-ஆம் நாளான இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து ஆதரவு அளித்து பேசினார்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடமும் விரிவாக பேட்டியளித்தார்.
பிறகு அவர் உண்ணாவிரத களத்தை ஆதரித்து பேசியதாவது…
கடந்த 07.12.2006 -ல் அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக்கும் கோப்பை ஒன்றிய அரசுக்கு, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்..
இன்று வரை அதற்கு பதிலில்லை.
தமிழின் மீது பற்று இருப்பது போல காட்டும் பிரதமர் மோடி அரசு இதை செய்திட வேண்டும்
தமிழ்நாடு அரசும், முதல்வரும் இதற்கு முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இவர்களின் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் சட்ட அமைச்சர் மாண்புமிகு திரு.ரகுபதி அவர்களை இங்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ராஜஸ்தான், உ.பி, ம.பி, பீஹார் மாநிலங்களில் இந்தி அந்தந்த மாநில உயர் நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக உள்ளது.
அதை எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காட அனுமதிக்க வேண்டும்.
இந்திக்கு ஒரு நியாயம்? தமிழுக்கு ஒரு நியாயமா?
நமது தமிழ் நிலத்தில் அந்த உரிமையை கோருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு உண்ணாவிரதமிருந்தோரை தனித்தனியாக சந்தித்து நலம் விசாரித்தார்.
மஜக சார்பில் போராட்ட களத்தின் செலவுகளுக்கு 5 ஆயிரம் நன்கொடை தருவதாகவும் அறிவித்தார்.
இன்றைய நிகழ்வில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ. மணியரசன், அற்புதம்மாள், பத்திரிக்கையாளர் T.S.S. மணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
மேலும் மஜக மாநில துணை செயலாளர் அசாருதீன், மனிதநேய வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் அமீன், மாநில துணைச் செயலாளர் ஸ்வாதீஸ், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான் கான், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் ரவூப் ரஹீம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை_மாவட்டம்
05.03.2024.