மத்திய சென்னையில்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்

பிப்.20.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியா மஜகவில் பலர் இணைந்து வருகின்றனர்.

மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் தலைமையில் துறைமுகம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ரஸ்வி, முஸ்தபா, அரஃபாத் கான், முஹம்மது இஷாக் ஆகியோர் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்துக்கொண்டனர்.

புதியதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பாக மக்கள் பணி செய்ய மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்தினார். அவருடன் மாநில துணைச் செயலாளர் அசாருதீன் உடன் இருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை_மாவட்டம்
20.02.2024.