தியாகி பழனிபாபா நினைவேந்தல்….

பாபாவின் அரசியலைத்தான் மஜக முன்னெடுக்கிறது…

தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

ஜனவரி.29.,

திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மங்களத்தில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் எழுச்சியாக நடைப்பெற்றது.

தியாகி பழனிபாபா நினைவேந்தல், மஜக-வில் புதியவர்கள் இணையும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என பெரும் எழுச்சியுடன் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

முன்னதாக திருப்பூர் முதல் மங்களம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் – மஜக கொடிகளுடன் ஊர்வலம் நடைப்பெற்றது.

இதனை மாவட்ட செயலாளர் ராயல் ராஜா, டிப்மா. ஜாகீர் உசேன், மஜக செயல்பாட்டாளர்கள் ரமேஷ் தேவர், பிரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

வழியெங்கும் பதாகைகள் வைக்கப்பட்டு, கொடிகள் நடப்பட்டு, ஆங்காங்கே கொடியேற்று நிகழ்வுகளும் நடைப்பெற்றது.

மஜக மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, கோவை ஜாபர் ஆகியோர் நிகழ்வை செம்மை படுத்தினர்.

நிறைவாக மங்களத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்களை தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

பிறகு நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பழனிபாபாவின் சமூகநீதி அரசியலையும், ஆதிக்க எதிர்ப்பு நிலையையும் விரிவாக பேசினார்.

அவரது அல்முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி வார ஏடுகளின் கட்டுரைகள் குறித்தும், சித்தாந்த தெளிவு குறித்தும் கூறினார்.

வன்னியர், முக்குலத்தோர், தலித்துகள், கவுண்டர்கள், யாதவர்கள், நாடார்கள் என பல இன மக்களோடும், அவர்களின் தலைவர்களுடனும் கொண்டிருந்த அவரது சமுதாய நட்பையும், தூர நோக்கு பார்வையையும் பேசியவர், இன்று அவரது நுட்பமான அரசியலைத்தான் மஜக முன்னெடுப்பதாக கூறியதும் மக்கள் கைத்தட்டி ஆராவரித்தனர்.

முன்னதாக சமூக நல்லிணக்க உறுதிமொழியை தலைவர் வாசிக்க, மக்கள் எழுந்து நின்று அதை வழி மொழிந்தனர்.

இன்றைய நிகழ்வு பாபாவின் அரசியலை புதிய தலைமுறையினருக்கு எடுத்தியம்பும் களமாக மாறியது.

சமூக வலைதளங்களில் பலரும் நேரலை செய்ததால், உலகமெங்கிருந்தும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் சூழ பொதுக்கூட்டம் நிறைவுற்றது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஈஸ்வரன், ஷேக் ஒலி, சாதிக், யாசர், ஷேக் அப்துல்லாஹ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் வானவில் காதர், MJTS மாவட்ட செயலாளர் ராயல் பாஷா, மங்களம் முன்னால் பொறுப்பாளர் LG. இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக அப்பா J.ராஜேந்திரன், பாமக சிறுபான்மை பிரிவு தலைவர் சேக் மைதீன், செந்தில் வாண்டையார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பூர்_மாவட்டம்
28.01.2024.