பிப் 10 திருச்சி சிறை முற்றுகை….

போராட்ட குழு குழுவின் ஆலோசனை கூட்டம்

ஜனவரி.29.,

பிப்ரவரி 10 – அன்று திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை மஜக அறிவித்துள்ளது.

இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜனவரி 8, 2022 முதல் கோவை, நெல்லை, கடலூர், சேலம் மத்திய சிறைகளை ஆயிரக்கணக்கான மக்களுடன் முற்றுகையிட்ட மஜக, சென்னையில் தலைமைச் செயலக முற்றுகையையும், சட்டசபை முற்றுகையையும் இதற்காக வீரியமாக நடத்தியுள்ளது.

தற்போது ‘ நிரந்தர விடுதலையே லட்சியம்: அதற்கு அமைச்சரவை தீர்மானம் அவசியம்’ என்ற முழக்கத்தோடு திருச்சி மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

36 ஆயுள் சிறைவாசிகள் உட்பட 20 ஆண்டுகளை கடந்த கைதிகள் அனைவரின் நிரந்தர முன் விடுதலைக்கும் தமிழ்நாடு அரசு அமைச்சரவை தீர்மானத்தை விரைவில் நிறைவேற்றுமா? என்ற ஆர்வமும் எழுந்துள்ளது

இதனிடையே இன்று இணை பொதுச் செயலாளரும் போராட்ட குழு தலைவருமான ஈரோடு பாருக் அவர்கள் தலைமையில் போராட்ட ஆயத்த குழுவின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்துகொண்டு போராட்டு குழு இதுவரை செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து அடுத்து செய்ய வேண்டிய களப்பணிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் போராட்ட குழுவின் துணை தலைவர், துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில செயலாளர் வல்லம் அகமது கபீர் மற்றும் மாநில செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாநில துணை செயலாளர் துரை முகம்மது ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் திருச்சி மாவட்ட நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
29.01.2024.