மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு…
ஜனவரி…
இன்று திருப்பூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூர் முதல் மங்களம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் மஜகவினர் ஆராவாரத்துடன் கொடிகள் சூழ வரவேற்பளித்தனர்.
வழியெங்கும் காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
முன்னதாக காயத்ரி ஹோட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேட்டியளித்தார்.
அப்போது பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக சாடினார்.
அவர் கூறியதாவது….
VP சிங் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அவர், லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு கொண்டு அவ்வப்போது கூட்டணிகளை மாற்றினார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கூட்டணி மாறுவது சகஜமானது.
ஆனால் இவரது அரசியல் போக்கு சந்தர்ப்பாவதம் நிறைந்தது.
18 மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் முரண்பாடு கொண்டு, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி கொண்டு மீண்டும் முதல்வர் ஆனார்.
பாஜக வை , ஃபாசிசத்தை வீழ்த்தப் போவதாக கூறி இந்தியா கூட்டணியை உருவாக்கினார்.
பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
என்ன நடந்தது என தெரியவில்லை.
இன்று லாலு, தேஜஸ்வி யாதவுடன் முரண்பட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக உள்ளார்.
இப்படி ஒரு சுயநல – பதவி பித்தரை நாடு பார்த்ததில்லை
இந்தியாவில் மட்டுமல்ல. ஆசியா கண்டத்திலேயே இவரை போன்ற சந்தர்ப்பவாத அரசியில் வாதி யாருமில்லை.
இவ்வாறு அவர் கடுமையாக சாடினார்.
பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
28.01.24.