MKP அபுதாபி மாநகரம் சார்பாக சிறப்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி…

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) அபுதாபி மாநகரம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி அபுதாபி சிட்டியில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் 29-03-2023 புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில் அமீரக மற்றும் மாநகர நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் இதில் தமிழக பாரம்பரிய இஃப்தார் உணவுகள் பரிமாறப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயலாளர் Dr.அசாலி அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.

மௌலவி. கலிமத்துல்லாஹ் அவர்கள் இறைவசனம் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்,
சகோ.ரைஸுல் இஸ்லாம் அனைவரையும் வரவேற்று பேசினார் நிகழ்ச்சிக்கு அமீரக ஆலோசகர் சகோ.ஷேக் தாவூத், அமீரக துணைச்செயலாளர் முகம்மது யூசுப், அபுதாபி மாநகர ஆலோசகர் A.R. ரியாஸ் அஹமத், மர்ஹபா அசோஸியேஷன் தலைவர் சகோ.சொஹைபுதீன், அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் சகோ. அஹமது, தமிழ் ஆர்வலர் திரு.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை உரை ஆற்றிய அமீரக செயலாளர் Dr. அசாலி அஹமது அவர்கள் தமிழகம் மற்றும் அமீரகத்தில் செய்து வரும் மனிதநேய பணிகளை எடுத்துரைத்தார் மேலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA, Ex. MLA அவர்கள் காணொளி மூலமாக சிறப்பு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகர துணை செயலாளர் J.ஹக்கீம் தொகுத்து வழங்க, மாநகர செயலாளர் M.ரசூல் முஹம்மது நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.