மலேஷிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (KIMMA) கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ செய்யது இப்ராகிமை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
கோலாலம்பூரில் – WTC – யில் அம்னோ கட்டிடடத்தில் இருக்கும் அக்கட்சி தலைமையகத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
2007 முதல் தங்களுக்குள் இருக்கும் நட்பை இருவரும் பகிர்ந்துக் கொண்டனர்.
இருமுறை செனட்டராக (ராஜ்யசபா MP) இருந்த டத்தோ ஶ்ரீ செய்யது இப்ராகிம் அவர்கள் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
இங்கு வாழும் இந்திய மக்களின் கல்வி, அரசியல், பொருளாதார உதவிகளுக்கு இக்கட்சி தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
மஜக-வின் பணிகளை வளைதளங்கள் மூலம் கவனித்து வருவதாகவும், பணிகள் சிறப்பாக இருப்பதாகவும் டத்தோ ஸ்ரீ செய்யது இப்ராஹீம் கூறினார்.
மலேஷியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள இஃப்தார் நோன்பு துறப்பு ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்காக ஒரு வார பயணமாக வந்திருக்கும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை தொடர்ந்து இந்திய சமூகத்தின் பல்வேறு ஆளுமைகளுடன் நல்லெண்ண சந்திப்பு ஏற்பாடாகி உள்ளது குறிப்பிடத்தக்கது,