ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று 17.02.2023 வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்குப் பிறகு (ஜூம்மா) சுல்தான்பேட்டை பள்ளியில் மஜக சார்பில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்தனர்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு துணை தலைவருமான பாபு ஷாகின்ஷா, மாவட்ட செயலாளர் A.ஷபீக் அலி, மாவட்ட பொருளாளர் பாபு மாவட்ட துணை செயலாளர் பக்கீர் முகமது, மாவட்ட தொழிற்சங்க தலைவர் A.சபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் S.பாசித், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் ஹாரிஸ், சுல்தான் பேட்டை கிளை செயலாளர் ரஹ்மான், சித்திக், முபாரக் உள்ளிட்ட திரளான மஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.