தென்காசியில் மஜக சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் மற்றும் அன்னை உதவி கரம் & ஜலாலியா மருத்துவமனை மற்றும் ப்ரோ விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் இந்து துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஆதம் ஹனீபா தலைமை வகித்தார்.

இம்முகாமில் திராளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் பொன்னானி அபுதாஹிர், மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கரன்கோவில் இஸ்மாயில், சிலம்பாட்டம் சாகுல், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர் சாதிக், தென்காசி நகர செயலாளர் அஜ்மீர் காஜா, வடகரை பேரூர் கழகச் செயலாளர் சையத் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.