பேரறிவாளன் இல்ல பெருவிழா… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூலை;30,

31 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவித்த பேரறிவாளன் அவர்கள் , உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மே மாதம் விடுதலை ஆனார்.

அவரது விடுதலைக்காக தாயார் அற்புதம்மாள் அவர்கள் நெடிய ஜனநாயக வழி போராட்டங்களையும், சட்ட முயற்சிகளையும் மேற்கொண்டார். உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் அவரது தந்தை குயில் தாசனும், இதற்கு துணை நின்றார்.

பேரறிவாளனின் விடுதலைக்கு பின்பு அவரது விடுதலையை ஒருங்கிணைத்த நண்பர்கள் வட்டம் அவரது குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், அவரது பெற்றோரின் பிறந்த நாளை ‘குயில் 80 : அற்புதம் 75 ° என்ற பெயரில் நூல் வெளியீட்டு விழாவாக அவர்களது சொந்த ஊரான ஜோலர்பேட்டையில் இன்று நடத்தினர்.

அதில் குயில் தாசன்,அற்புதம்மாள், ஆகியோருக்கு விழா மலர் வெளியிடப்பட்டது.

அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் வாழ்த்துரையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திகழ்வுக்கு இவரது விடுதலையில் முன்னின்ற பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதில் கடந்த சட்டமன்றத்தில் அவரது விடுதலைக்கும், சிறைவிடுப்புக்கும் சமரசமின்றி குரல் கொடுத்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

அவரை பார்த்ததும் குயில்தாசன் அவர்கள் கட்டியணைத்து அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தினார்.

பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாளும் நெகிழ்வுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரமணி, நடிகர் சத்யராஜ், கொளத்தூர் மணி, தோழர். தியாகு, வன்னியரசு, சுப.உதயகுமார்,குடந்தை அரசன், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிகள் கலை, இலக்கிய விழாக்களாக முன்னெடுக்கப்பட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருடன் நடைப்பெற்றது.

இதில் மஜக மாநில துணைச்செயலாளர் அப்சர் சையத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜகிருல்ஜமான், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல செயலாளர் குடியாத்தம் முபாரக் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் முன்னா உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பத்தூர்_மாவட்டம்
30.07.2022