அன்னை கல்விக் குழும தாளாளர் மகள் திருமணம்..! மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து…!!

கும்பகோணம் அன்னை கல்வி குழுமத்தின் தாளாளரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை நிர்வாகி ஹூமாயூன் அவர்களின் அண்ணனுமான அப்துல் கபூர் அவர்களின் மகள் நஸ்ரின் தஸ்லீமா அவர்களுக்கும், ஜாகிர் உசேன் அவர்களுக்கும் இன்று கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது.

இத்திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவருடன் மாநில துணைச் செயலாளர் அகமது கபிர் கலந்து கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், மருது மக்கள் இயக்க தலைவர் முத்துப் பாண்டி, இயக்குனர்கள் தம்பி ராமையா, மு. களஞ்சியம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் மஜக மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் யாஸின், திருச்சி முஹைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கும்பகோணம்
17.07.2022