You are here

முத்துப்பேட்டை பாக்கர் அலி இல்ல மணவிழா.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று வாழ்த்து!

ஜூலை 17.,

முத்துப்பேட்டை தர்ஹாவின் அறங்காவலர் S.S.பாக்கர் அலி சாஹிப் அவர்களின் மகன் தாரிக் அகமது மணமகனுக்கும், மணமகள் பாத்திமுத்து சனா அவர்களுக்கும் இன்று ஜாம்பவானோடையில் திருமணம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

இதில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜிதீன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் PR.பாண்டியன், SDPI கட்சி பொதுச் செயலாளர் அ.ச. உமர் பாருக், ஆடலரசன் Ex MLA, மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், CPl உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
17.07.2022

Top