நாகர்கோவிலில் மஜகவின் இஃப்தார் நிகழ்ச்சி.. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது பங்கேற்ப்பு..

ஏப்ரல்:25., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் (இதயங்களை இணைக்கும்) இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் முஜிப் ரகுமான், அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது…

இந்தியாவில் பாசிசம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது.

இந்தப் பாசிசத்தால் சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றும் பேசினார்.

முன்னதாக விசிக மாவட்ட செயலாளர், திருமாவேந்தன், குமரி (கி) காங்கிரஸ் K.T. உதயம், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹரிகிரன் பிரசாத், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் MP, குமரி மாவட்டம் முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா, கிறிஸ்தவ ஜனநாயக பேரவை நிறுவன தலைவர் சுரேஷ் சாமியார் காணி, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், பச்சைத் தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் சுப உதயகுமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மஜக மாநிலத் துணைச் செயலாளர் காயல் சாகுல் ஹமீது, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, பகுதி, கிளை, நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளானோர் கலந்து கொண்டனர்…

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
24-4-2022