
ஏப்;25., திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஹாஜி MMA.சுக்கூர் அப்பா அறக்கட்டளை, மில்லெனியம் மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி டாக்டர் M.முகைதீன் அப்துல் காதர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மஜக வின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், MJVS மாவட்ட செயலாளரும் சுக்கூர் அப்பா அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான ஜான் முகம்மது, MKP அமீரக மண்டல செயலாளரும் சுக்கூர் அப்பா அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் அசாலி அகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மில்லெனியம் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனத் தலைவர் ஹாஜா அலாவுதீன், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினரும் மஜக துணை பொதுச்செயலாளருமான நாச்சிக்குளம் தாஜ்தீன், நாச்சிகுளம் ஜமாத் தலைமை இமாம் அப்துல்காதர், ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் M.செல்வராஜ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS.விஜயன், திருத்துறை பூண்டி சட்டமன்ற உறுப்பினர் K.மாரிமுத்து, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், காவல்துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிகர் பேரவை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாச்சிகுளம் மஜக வின் செயலாளர் ரியாஸ் அகமது, பொருளாளர் சதாம் உசேன், யாஸர் அரபாத், ஜியாவுதீன், தீன் முகம்மது ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருவாரூர் மாவட்டம்
24.04.2022