அமீரக சட்டநிபுணருடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு!

ஏப்ரல்:13., ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல இளம் சட்ட நிபுணரும், செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்த பெண்ணிய செயல்பாட்டாளருமான .ஹிஸ்ஸா ஆசாத் ஹீசைன் அவர்களை நல்லெண்ண நிமித்தமாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்தார்.

அமீரகத்தில் வாழும் தமிழக தொழிலாளர்களுக்கு சட்ட வழிகாட்டல் வழங்க உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த பொதுச் செயலாளர் அவர்கள், அவரது பெண்ணிய செயல்பாடுகளை பாராட்டி நினைவுப் பரிசினையும் வழங்கினார்.

தமிழர்கள் அமீரக வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதை அவர் பாராட்டி கூறினார்.

இச்சந்திப்பின் போது அமீரக MKP மண்டல செயலாளர் டாக்டர் A. அசாலி அகமது, பொருளாளர் அபுல் ஹஸன், துணைச் செயலாளர் ஜியாவுல் ஹக், சமூக ஆர்வலர் அன்வர் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
12.04.2022