துபை கலாச்சார மற்றும் பண்பாட்டு மையம்.. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை!

ஏப்ரல் 13., துபையில் புகழ் பெற்ற ஜுமா அல் மஜித் கலாச்சார மற்றும் பண்பாட்டு மையத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை புரிந்தார்.

இங்கு 20 லட்சம் புராதான நூல்களை கொண்ட பெரும் நூலகம் ஒன்றும் இயங்கி வருகிறது.

இதன் நிர்வாக மேலாளர் அன்வர் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களை வரவேற்று இதன் சிறப்புகளை விளக்கினார்.

அப்போது தமிழகத்தின் நீடூர், வேலூர் மதரஸாக்களிலிருந்தும் ஆவணங்களின் நகல்களை பெற்றதாக கூறினார்.

1000 ஆண்டுகள் பழமையான கையெழுத்து படிகள் இங்கு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருவதை பொதுச் செயலாளர் பார்வையிட்டார்.

புராதான அரபு மற்றும் பெர்சிய கலைஒவியங்கள், எழுத்தோவியங்கள், வரலாற்று தடங்கள் என ஆயிரம் ஆண்டு கால பழமைகளின் காப்பகமாக இது திகழ்வதாக பொதுச் செயலாளர் அவர்கள் கூறினார்.

பிரபல வணிகரான ஜுமா அல் மஜித் அவர்கள், தனது சொந்த செலவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதை நிறுவினார்.

முதுமையில் இருக்கும் அவர் தற்போதும் இதன் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளின் கலை மற்றும் வரலாற்று களஞ்சியமாக திகழ்கிறது.

வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள், பழமை மீது தேடல் கொண்டவர்கள் என பலரும் உலகம் முழுவதிலிமிருந்து இங்கு வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது அமீரக மண்டல MKP செயலாளர் டாக்டர் A. அசாலி அகமது, பத்திரிக்கையாளர் முதுவை.ஹிதாயத் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
12.04.2022