ஏப்ரல் 12., புனித ரமலானை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் கடந்த 25 ஆண்டுகளாக திருக்குர்ஆனை ராகத்துடன் ஒதும் சர்வதேச போட்டி நடைபெற்று வருகிறது.
துபை கலாச்சார மையத்தில் (DCC) நடைபெறும் இந்நிகழ்வில் உலகின் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கள் புலமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்நிகழ்வு பன்னாட்டு முக்கிய பிரமுகர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுடன் நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 11.அன்று சிறப்பு விருந்தினராக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இங்கு வருகை தந்து போட்டியை கண்டு களித்தார்.
அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.
பிறகு அங்கு பேட்டியளித்தவர், இது உணர்வுப்பூர்வமாகவும், வித்தியாசமான புதிய அனுபவமாகவும், இறையச்சம் ஊட்டக் கூடியதாகவும் இருந்ததாக கூறினார்.
இந்நிகழ்வில் பார்வையாளராக பங்கேற்க உலகெங்கிலிருந்தும் பலர் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் துபை MKP மாநகர பொருளாளர் லால்பேட்டை பயாஸ், முதுவை.ஹிதாயத்துல்லா, கலைமகன் முபாரக் ஆகியோரும் உடன் சென்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
11.04.2022