நாகை.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை நகராட்சியில் 29-வது வார்டிலும், வேதாரண்யம் நகராட்சியில் 1-வது வார்டிலும், திட்டச்சேரி பேருராட்சியில் 8 மற்றும் 9-வது வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நிலைபாடுகளை உள்ளூர் சூழல்களுக்கேற்ப எடுக்கும் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகங்களுக்கு தலைமை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மஜக சார்பில் போட்டியிடும் இடங்களில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டிருக்கிறது.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம
03.02.2022