You are here

உள்ளாட்சி தேர்தல்..! செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக விருப்பமனு..!!

சென்னை.ஜன.29., தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட தமிழகம் முழுவதும் மஜகவினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று 28.01.2022 மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் தேர்தல் ஒழுங்கு பணிக்குழு தலைவரும், துணைப் பொதுச்செயலாளருமான என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், பல்லாவரம் ஷஃபி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் தில்ஷாத், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்,
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம்
28.01.2022

Top