73வது குடியரசு தின விழா.! அனகை நகரத்தில் மஜக மாநில துணைசெயலாளர் ஷஃபி தேசிய கொடியேற்றினார்.!!

செங்கல்பட்டு.ஜன.26., சுதந்திர இந்தியாவின் 75-ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், அனகை நகரத்தில் மாநிலத் துணைச் செயலாளர் பல்லாவரம் A.ஷஃபி அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்தார். அதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் M.ஜாகிர், பொருளாளர் L.தில்சாத் ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமது நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை எழுப்ப அனைத்து மஜகவினரும், உறுதிமொழி கோஷத்தை எழுப்பினார்கள்.

நிகழ்ச்சியில் அனகை நகர செயலாளர் சாதிக் பாட்ஷா, பல்லாவரம் நகர செயலாளர் ஷானவாஸ், தாம்பரம் நகர செயலாளர் ஷேக்தாவூத், பம்மல் கயாஸ், அனகை நகர பொருளாளர் இஸ்மாயில், மேலும் மோகன், ஜெகதீஸ், இம்ரான், யுவராஜ் உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம்
26.01.2022