73வது குடியரசு தினவிழா! குடியாத்தம் நகரத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கிய மஜகவினர்!

வேலூர்.ஜன:26., 73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதை தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில், நகர செயலாளர் S.அனிஸ், அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்று விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அப்பகுதி வாழ் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர், இதில் மஜக மாவட்ட பொருளாளர் IS.முனவ்வர் ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார். குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் அவர்கள் பொதுமக்கள் இனிப்புகளை வழங்கியதுடன், எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், எழுது கோல், வடிவியல் பெட்டி வழங்கி இவ்விழாவை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் நகர மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான் பாஷா, முஹம்மத் உசேன், அலிம், கலிம், ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
26.01.2022