தென்காசி.ஜனவரி 20., மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன் அவர்களின் மகள் P.நஸ்ரின் பானு மற்றும் மணமகன் S.அக்பர் அலி ஆகியோரது திருமணம் நிகழ்வு அச்சன்புதூரில் நடைப் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினார்.
அப்போது ஒமெக்ரான் தொற்று குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும், அரசு கூறியுள்ள அறிவுறுத்தல்களையும், இது குறித்த உலமாக்களின் பத்வாக்களையும் பின்பற்ற வேண்டும் எனக் கூறியவர், தென்காசி மாவட்ட செயலாளர் பீர் மைதீன் நீண்ட கால பொது நல ஊழியர் என்றும், மக்கள் நலனுக்காக சிறை சென்றவர் என்றும் பாராட்டி பேசினார்.
இத்திருமண நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தமுமுக மாநிலச் செயலாளர் நைனார் முஹம்மது, சமூக ஆர்வலர் புளியங்குடி செய்யது அலி, தமுமுக மாநில தொண்டரணி துணை செயலாளர் கோகோ அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்ட பொருளாளர் ஆதம்பின் ஹனிபா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் வாவை இனையத்துல்லா, விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், விருதுநகர் மாவட்ட பொருளாளர் பாதுஷா, தொழிற்சங்கத் மாவட்ட தலைவர் ரவி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் அன்வர் சாதிக், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மாஷா மஜித், தென்காசி நகர செயலாளர் சிலம்பாட்டம் சாகுல், நகர பொருளாளர் முஸ்தபா, புளியங்குடி நகர செயலாளர் பாதுஷா, சங்கரன்கோவில் நகர செயலாளர் சுல்தான், மாணவர் இந்தியா முகமது கனி, அச்சன்புதூர் செயலாளர் முகம்மது நாசர், வடகரை பேரூர் கழக செயலாளர் செய்யது அலி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் முகம்மது ஷபிக், மற்றும் நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்காசி_மாவட்டம்
20.01.2021