சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீசார் அத்துமீறல்…மஜக துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் ஆறுதல் கூறினார்..!!

சென்னை.ஜன.19.,

சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் மாஸ்க் அணியவில்லை என கூறி போலீஸார் தாக்குதல் நடத்தியதோடு காவல்நிலையத்தில் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும், முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர். தலையை பீரோவில் முட்டி தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். இரவு 1 மணியில் இருந்து காலை 11 மணிவரை அடித்து உதைத்தனர் என்றும் தனது முகத்தில் சிறுநீர் கழித்தனர் என்றும் அம் மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் இன்று ரஹீம் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவருடன் மஜக என்றும் துணை நிற்கும் என்று.

இதில், மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், பெரம்பூர் பகுதி செயலாளர் ரஷீத், துறைமுகம் அபுபக்கர், இஸ்மாயில் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சென்னை
18.01.2022