ஜனவரி.19.,
மஜக இளைஞர் அணி சார்பில் ஜனவரி 8, அன்று கோவையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் தொடர்ச்சியாக காணொளி கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி பொதுமன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கை மக்கள் மயமாகி வருகிறது.
பல அமைப்புகள் களமிறங்கி போராட்டம், கருத்தரங்கம், மாநாடு என அறிவித்து மக்கள் ஆதரவை உருவாக்கி வருகின்றன.
ஜனவரி 8 கோவை பிரகடனத்தின் 10 ஆம் நாளான இன்று மஜக இளைஞர் அணி சார்பில் ZOOM வழியே நடைபெற்ற கருத்தரங்கிற்கு அதன் செயலாளர் அசாருதீன் தலைமை வகித்தார்.
நிகழ்வில் தொடக்க உரையாற்றிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433 A யின்படி ஆயுள் தண்டணை காலம் என்பது 14 ஆண்டுகள் தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதை நினைவூட்டி பேசினார்.
இதில் தமிழக அரசு தனக்கிருக்கும் 161 வது பிரிவு தரும் வாய்ப்பை பயன்படுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
சிறப்புரையாற்றிய முன்னாள் தூக்கு தண்டனை கைதியான தோழர்.தியாகு அவர்கள், தமிழக அரசு இதில் என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் இதில் சாத்தியம்? என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார்.
அரசியல் சட்டப் பிரிவு 32, 33, 161, 162 மற்றும் 433 முதல் 435 வரை உள்ள விபரங்களை தமிழக அரசும், அது அமைத்துள்ள ஆதிநாதன் ஆணையமும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டல்களையும் நுட்பமாக கூறினார்.
அவரது உரைக்கு பின்னால், ஐயங்கள்,கேள்விகள் இருப்பின் யாரும் கேட்கலாம் என்றார்.
அப்போது பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இந்த உரையின் முக்கிய அம்சங்களை ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற இதழ்களில் சிறப்புக் கட்டுரையாக வெளியிட முயற்சி எடுங்கள் என்றும், இது மக்கள் ஆதரவை திரட்ட உதவும் என்றும் அவரிடம் கூறினார்.
நிகழ்ச்சியை மஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் ஹாரிஸ் அவர்கள் (Youtube) நேரலை செய்தார்.
கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகிப்பவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும், மனிதநேய சொந்தங்களும் இதில் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ReleaseLongTermPrisoners
#மஜக_கோவை_பிரகடனம்
18.01.2022