கோவை.ஜனவரி.07., நாளை கோவையில் மஜக சார்பில் நடைபெறவுள்ள சிறை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வாகனங்களில் மஜக வினரும், பொதுமக்களும் புறப்பட்டு வரத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு அவ்வாறே வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் புறநகர்களில் தங்கும் வகையில் ஒய்விடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய சூழல் நெருக்கடி காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோரை அழைத்து வர வேண்டாம் என்றும் தலைமையகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சீருடை அணிந்த இளைஞர் அணியிடம் கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியை நிலை நாட்டுதல், முக கவசங்களை வினியோகித்தல் ஆகிய பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை அணி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவ குழு ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாவட்ட அலுவலகத்தில் தொண்டர்கள் ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டவாறு உள்ளனர்.
தலைமை நிர்வாகிகள் அனைவரும் ,திட்டப் பணிகள் குறித்து தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களை கண்காணித்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார்.
கோவை மாநகர் எங்கும் சிறைவாசிகளின் விடுதலையை முன்னிறுத்தும் விளம்பரங்கள் மக்களை உசுப்பிக் கொண்டிருக்கிறது .
கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் இதர களப் பணிகளை தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
7.1.2022