
மார்ச்.28,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் தலைமையில் மஜகவினர் கடைவீதி மற்றும் வீதிகளில் ஆதரவு திரட்டினர்.
அப்பொழுது அப்பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் அன்பழகன் அவர்கள் பொருளாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
வேட்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட பொருளாளர் தங்களது வெற்றிக்காக மஜகவினர் சுழன்று பணியாற்றுவார்கள் என தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காரியாலயத்திற்கு வருகை தந்தார்.
அவரை குடந்தை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம் அவர்களும், திமுக குடந்தை நகர செயலாளர் தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகளும் வரவேற்றனர்.
அவர்களுடன் சட்டமன்ற தொகுதியின் பரப்புரை குறித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்வுகளில் மஜக மாநில செயலாளர் ராசுதீன், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இக்பால் சேட், யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, குடந்தை ஆசாத், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் யாசின், இளைஞரணி துணை செயலாளர் ஹசேன் உள்பட திரளான மஜக வினர் கலந்துக் கொண்டனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#கும்பகோணம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021
27.03.2021