
திருச்சி.மார்ச்:26.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஸ்ரீரங்கம் கோயில் அருகில் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர் தலைமையில் பொருளாளர் அந்தோணிராஜ், துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, ஷேக் அப்துல்லா, முஹம்மது பீர்சா மற்றும் நிர்வாகிகள் அன்வர்தீன், சையது, மைதீன், தமீம் அன்சாரி, அமீர், அஹமத், மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElection2021
#திருச்சி_மாவட்டம்
#MJK2021
26.03.2021