
மார்ச்.23,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.நேரு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனியாண்டி அவர்களின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
அவரது பேச்சை உற்று நோக்கிய திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளர்
கே.என்.நேரு அவர்கள் பேச்சு முடிந்ததும் அவரை அழைத்து பாராட்டி, தங்களின் உரை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்ததாகவும், மஜகவினரின் உழைப்பு பற்றி தனக்கு தெரியும் என குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, முகமது பீர்ஷா, சேக் அப்துல்லா, மற்றும் தர்கா பாரூக் நிர்வாகிகள் சேக் தாவூத், அன்வர்தீன், அப்துல் வாஹித், சையது ஆகியோர் கலந்து கொண்டனர்.
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#திருச்சி_மாவட்டம்.
#MJKitWING #TNElection2021