ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!


திருப்பத்தூர்: மார்ச்.21.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆம்பூர் தொகுதி வேட்பாளர் திரு.வில்வநாதன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் ஜஹிருல் ஜமா தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து தேர்தல் பரப்புரை குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துரையாடிய மஜகவின் மாவட்ட மற்றும் ஆம்பூர் நகர நிர்வாகிகள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மஜகவினர் பங்கேற்று தங்களுடைய பிரச்சார வியூகம் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் கழக வேட்பாளர் திரு.வில்வநாதன் அவர்களின் வெற்றிக்கு பம்பரம் போல் சுழன்று களப்பணியாற்றுவர்கள் என வாக்குறுதி அளித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElections2021
#MJK2021
#ஆம்பூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
20.03.2021