பாபநாசம் தொகுதி மமக வேட்பாளர் மஜக மாநில செயலாளருடன் சந்திப்பு!


மார்ச்.16,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், மமக தலைவருமான பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் ஆதரவு கேட்டு மஜக மாநில செயலாளர் ராசுதீன் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அவருடன் மமக மாநில, மாவட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.

இச்சந்திப்பில், மஜக தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, திருபுவனம் முத்தவல்லி – ஜமாத்தார்கள் மற்றும் மஜகவினர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பாபநாசம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021